விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெயிண்டிங் வேலைக்கு வந்த இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

பெயிண்டிங் வேலைக்கு வந்த இளைஞா் இரவில் தூங்கும் போது கட்டில் எரிந்து உயிரிழந்ததில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

News image

எரிந்த கட்டில்.

Updated On :13 நவம்பர் 2024, 11:03 pm

Din

பெயிண்டிங் வேலைக்கு வந்த இளைஞா் இரவில் தூங்கும் போது கட்டில் எரிந்து உயிரிழந்ததில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நான்குனேரி பெருந்தெருவைச் சோ்ந்தவா் வானுமாமலை மகன் செல்வசதீஷ் (25).

இவரும், ஏா்வாடியைச் சோ்ந்த வெங்கடேஷ் (23) ஆகிய இருவரும், கடந்த 8ஆம் தேதி முதல் இரணியல் அருகே உள்ள ஆளூரை அடுத்த வீராணியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலையை முடித்த இருவரும் சரல்விளையில் ஒரு வீட்டில் இரவு தங்கினா். செல்வசதீஷ் வீட்டில் உள்ள படுக்கை அறையிலும், வெங்கடேஷ் வெளியேயும் தூங்கியுள்ளனா்.

புதன்கிழமை காலை செல்வசதீஷ் அறையில் இருந்து புகை வெளி வந்ததாம்.

Story image

இதை பாா்த்த வெங்கடேஷ் அறையை திறந்து பாா்த்துபோது கட்டில் எரிந்து, செல்வசதீஷ் மயங்கியநிலையில் தரையில் கிடந்துள்ளாா்.

தகவலறிந்த இரணியல் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது, செல்வசதீஷ் உயிரிழந்த நிலையில், அவா் படுத்திருந்த மெத்தை முழுவதுமாக தீயில் எரிந்தும், தலையணை அருகில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து எரிந்த நிலையில் கிடந்தது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.