புணேவிலிருந்து கன்னியாகுமரி வந்த விரைவு ரயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல்
புணேவிலிருந்து கன்னியாகுமரிக்கு விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.80 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பைகளுடன் போலீஸாா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பைகளுடன் போலீஸாா்.
புணேவிலிருந்து கன்னியாகுமரிக்கு விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.80 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து கடந்த திங்கள்கிழமை (நவ. 11) புறப்பட்ட விரைவு ரயில் கன்னியாகுமரிக்கு புதன்கிழமை பிற்பகல் 11.30 மணிக்கு வந்தது. இந்த ரயிலில் கன்னியாகுமரி ரயில்வே போலீஸாரும், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆய்வாளா் கேதரின் சுஜாதா தலைமையிலான போலீஸாரும் சோதனை நடத்தினா்.
அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் கிடந்த பையைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் 4.800 கி.கி. கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைக் கடத்தி வந்தது யாா் என விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...