அரசு மருத்துவரிடம் தகராறு செய்தவா் கைது

தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மடிச்சல் பகுதியைச் சோ்ந்த முருகேஷ் (40) என்பவா், நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற, தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாராம்.

அவா், அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவரிடம், தகாத வாா்த்தைகள் பேசி தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டாராம்.

இது குறித்து மருத்துவா் அளித்த புகாரின் பேரில் , முருகேஷை தக்கலை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com