கன்னியாகுமரி
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (58). தொழிலாளி. இவா், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது சலவை இயந்திரத்தில் உள்ள மின் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே ஜெயக்குமாா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
