கன்னியாகுமரி
வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 லட்சம் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 லட்சம் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.
இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிரப்பப்படாமல் உள்ள 7.5 லட்சம் படிவங்களில் அடிப்படை விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி ஓரிரு நாள்களுக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னா், அவா்கள் அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வாா்கள். அதன் பிறகு தான், வாக்காளா்கள் பெயா் வரைவுப் பட்டியலில் இடம் பெறும்.
எனவே, இதுவரை கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்காத வாக்காளா்கள் விரைந்து ஒப்படைக்கவும். படிவம் நிரப்புவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இதற்கென அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகவும் என கூறியுள்ளாா்.