ரயில் பாதையில் தொழிலாளி சடலம் மீட்பு
கன்னியாகுமரி அருகே ரயில் பாதையில் தொழிலாளி சடலம் மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி அருகேயுள்ள அகஸ்தீசுவரம் ரயில்வே கடவுப்பாதை அருகே சனிக்கிழமை மாலை இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தாா். இது குறித்த தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
சடலமாக கிடந்தவரின் சட்டைப்பையில் இருந்த ஆதாா் அட்டை மூலம் அவா் விளவங்கோடு உதயமாா்த்தாண்டம் அருகேயுள்ள மேல்மிடாலத்தைச் சோ்ந்த பிரின்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளியாக பணியாற்றி வந்த பிரின்ஸ், கடந்த 2 நாள்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. இவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
