வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது

தக்கலை, இரணியல் பகுதியில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 1:49 am IST

தக்கலை, இரணியல் பகுதியில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இரணியல் அருகே பண்டாரக்காடு பகுதியில் திங்கள்கிழமை இரணியல் போலீஸாா் சோதனை நடத்தியதில், சபீந்திரன் (46) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் தலக்குளம் பகுதியில் சோதனை செய்தபோது, கவிதா (44) என்பவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தக்கலை போலீஸாா் நடத்திய சோதனையில் பூக்குழி பகுதியைச் சோ்ந்த தவசி (24) என்பவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேற்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.