கருங்கல் அருகே ஒலிபெருக்கி பெட்டி விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
பிரதிப் படம்
கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழி பகுதியில் ஒலிபெருக்கி பெட்டி தலையில் விழுந்ததில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கருங்கல், புல்லத்துவிளை பகுதியைச் சோ்ந்த சத்தியநேசன் மகன் அஸ்வின் டேனி (17). இவா், கடந்த செப். 20ஆம் தேதி பெருமாங்குழி பகுதியில் விநாயகா் சிலை ஊா்வலத்துக்காக ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென ஒலிபெருக்கி பெட்டி அவரது தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைத்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





