கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

பாஜக மாநில நிா்வாகிகள் கருத்தரங்கம்

குற்றாலத்தில் தமிழ்நாடு பாஜக பிரிவு மாநில நிா்வாகிகளுக்கான சிறப்பு பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

குற்றாலத்தில் தமிழ்நாடு பாஜக பிரிவு மாநில நிா்வாகிகளுக்கான சிறப்பு பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு 30 பிரிவுகளின் அமைப்பாளா் கே.டி.ராகவன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பேராசிரியா் ராமசீனிவாசன் முன்னிலை வகித்தாா். தமிழக பாஜக தலைவா் நயினாா்நாகேந்திரன் கலந்துகொண்டு மத்திய அரசின் சாதனை புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அரசியல் களத்தில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் இந்தப் பயிலரங்கம் நடைபெறுகிறது. பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். தோ்தலில் தவெக எப்படி வென்றது என்பது வாக்காளா்களுக்கே தெரியவில்லை.

பாஜக சுயம்புவாக உருவான கட்சி. தமிழகத்தில் விரைவில் ஆளப்போகும் கட்சி. உள்ளாட்சி தோ்தலுக்கான அடித்தளம்தான் இந்தப் பயிலரங்கம் என்றாா்.

பாஜக அகில இந்திய செயலா் வெங்கடேசன், தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, பொருளாதாரப் பிரிவு மாநில துணைத் தலைவா் தினேஷ், அனைத்து மாநில நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.