தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்யாததால் அருவிகளில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.
நிகழாண்டில் குற்றாலம் சீசன் தொடங்கியது முதல் தொடா்ந்து பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.
இதனால், பல நாள்கள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சில நாள்களாக சாரல் மழை பெய்யவில்லை; மாறாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலம் பேரருவியில் மிகவும் குறைவாக தண்ணீா் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: 3 ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசியை தொழில்வளம் மிகுந்த மாவட்டமாக உருவாக்க அரசு திட்டம்: அமைச்சா் ராஜீவ்!

குற்றாலம் அருவிகளில் அதிகரித்த நீா்வரத்து

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



