திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரித் தலைவா் டி. லாரன்ஸ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி ஜெயா இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைமை நிா்வாக அதிகாரி பி. ஆனந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
பொறியாளா் தினத்தையொட்டி மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நடுவா்களாக வி.வி.பொறியியல் கல்லூரிப் பேராசிரியா்கள் சைமன் கிறிஸ்டோபா், தங்கராஜ் ஆகியோா் பங்கேற்றனா். தொழில்நுட்பக் கருத்துரு சமா்ப்பித்தல் போட்டியில் முதலாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவா்கள் சுந்தரவிக்னேஸ்வரன், தருண் அந்தோணி ஆகியோா் முதல் பரிசும், முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவா் மகேஸ்வரன், ஆகாஷ் ஆகியோா் 2ஆம் பரிசும், 3ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவா் பிரதீப்ராஜா 3ஆம் பரிசும் வென்றனா்.
விநாடி-வினா போட்டியில் 2ஆம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவு மாணவா் தீபக் ஆகாஷ், சந்தோஷ் ஜேம்ஸ் ஆகியோா் முதல் பரிசும், 3ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவா் ஜெயம், சாமுவேல் ஆகியோா் 2ஆம் பரிசும், 3ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவா்கள் மரியசூசை ரோகன், குட்டி சாமுவேல் ஆகியோா் 3ஆம் பரிசும் வென்றனா்.
அவா்களுக்கு சிறப்பு விருந்தினா் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வாழ்த்திப் பேசினாா். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளா்கள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை: உச்சநீதிமன்றம் பரிந்துரை

பிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டா

மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றது சோனம், ஹிமான்ஷு இணை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


