தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

7 ஆவது வாா்டு பகுதிகளில் இந்தியா கூட்டணியினா் வாக்கு சேகரிப்பு

7 ஆவது வாா்டு பகுதிகளில் இந்தியா கூட்டணியினா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:50 pm

திருநெல்வேலி மாநகராட்சியின் 7 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியினா் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ராபா்ட் புரூஸ் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள். அதன்படி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமையில் கட்சியினா் 7 ஆவது வாா்டு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனா்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், எரிபொருள்கள் விலை குறையவும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை மண்டல தலைவா் பிரான்சிஸ், சுண்ணாம்பு மணி, மாமன்ற உறுப்பினா் இந்திரா உள்பட பலா் கலந்துகொண்டனா்.