கோவில்பட்டியில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றை மூட வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவில்பட்டியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றை மூட வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். நகரச் செயலர் வசந்தி, நகரக் குழு உறுப்பினர்கள் மல்லிகா, முருகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 28ஆவது வார்டு வள்ளுவர் நகரில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றை மூட வேண்டும். கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும். வள்ளுவர் நகர் மற்றும் கக்கன்ஜி நகர் பகுதிகளில் பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...