இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வட்டன்விளை கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலையில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:57 pm

DIN

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலையில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் சித்திரைக் கொடை விழா சனிக்கிழமை வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,  இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோயிலை அடை ந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை,  கும்பம் வீதி வருதல், இரவு 7 மணிக்கு 504 சுமங்கலி பூஜை, இரவு 9 மணிக்கு பொம்மலாட்டம், 12 மணிக்கு மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெறும்.
சுமங்கலி பூஜையை தொழிலதிபர் ஸ்ரீதேவி சுதாகர் தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் பங்கேற்கிறார்.
புதன்கிழமை பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கும்பம் வீதியுலா, இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, கரகாட்டம், இரவு 12 மணிக்கு அம்மன் சப்பர பவனி ஆகியவை நடைபெறும். சப்பர பவனியை சென்னை தொழிலதிபர் சுதாகர் தொடங்கி வைக்கிறார். வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடைபெறும். 
ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.