
மலையில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞர் மலையில் இருந்து குதித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞர் மலையில் இருந்து குதித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
கழுகுமலை ஏ.பி.சி. நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மாரிமுத்து (22). வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால், அவரது பெற்றோர் மாரிமுத்துவை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள மலைப்பகுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கழுகுமலை போலீஸார், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





