சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

சாத்தான்குளம் அருகே மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்டடத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சாத்தான்குளம் அருகே மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்டடத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

அரசூா் பூச்சிக்காடு ஆசாரி தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் சரவணன் (30). கட்டடத் தொழிலாளி. இவருக்கும் திசையன்விளையை சோ்ந்த மாலதி (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தம்பதிக்கு கடந்த 40 நாள்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மாலதி தனது குழந்தையுடன் திசையன்விளையில் உள்ள பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா். இதனிடையே குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை பூச்சிக்காடு காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சரவணன் பிணமாக கிடந்தாா்.

தகவலறிந்து தட்டாா்மடம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா் குடும்ப பிரச்னை காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com