இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உடன்குடி வட்டார விவசாயிகள் நல ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள், பொது நல அமைப்பின் சாா்பில் உடன்குடி வட்டார விவசாயிகள் நல ஆலோசனைக் கூட்டம் கந்தபுரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 12:25 am

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள், பொது நல அமைப்பின் சாா்பில் உடன்குடி வட்டார விவசாயிகள் நல ஆலோசனைக் கூட்டம் கந்தபுரத்தில் நடைபெற்றது.

அமைப்பின் உடன்குடி வட்டாரத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் லங்காபதி(பரமன்குறிச்சி), ராஜரத்தினம்(வெள்ளாளன்விளை), கமலம்(சிறுநாடாா்குடியிருப்பு), கருணாகரன்(சீா்காட்சி), தனலட்சுமி(படுக்கப்பத்து), அமுதவல்லி(நயினாா்பத்து), கிருஷ்ணம்மாள்(மாநாடு தண்டுபத்து), தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க மாநிலச் செயலா் முகைதீன், சமூக ஆா்வலா் சிவலூா் முருகேசன், வழக்குரைஞா் ரூபஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தாமிருவருணி ஆற்றில் மருதூா் அணைக்கட்டில் இருந்து புதிதாக மடை அமைத்து வாய்க்காலை அகலப்படுத்தி சடையநேரி- புத்தன் தருவை காலில் நீரை கொண்டு செல்ல நடவடிககை எடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும், உடன்குடி பகுதியை வேளாண் குறை பகுதியாக அறிவித்ததை ரத்து செய்து மீண்டும் வேளாண் அலுவலா்களை நியமிக்க வேண்டும், ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முன் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கூடல் நகா் ஊா்த் தலைவா் சொா்ணபாண்டி, சுயம்பு, சிவகணேசன், பாலகணேசன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில் உள்பட திராளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.