ஆசிரியையைத் தாக்கி தங்க நகைப் பறிப்பு
உடன்குடியில் ஆசிரியையை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


உடன்குடியில் ஆசிரியையை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி புதுமனைப் புதுத்தெரு ஜான் சுந்தர்ராஜ் மனைவி வசந்தி(52). இவா், அங்குள்ள புனித அன்னை ஆா்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். புதன்கிழமை இரவு வசந்தி தனது வீட்டின் பின்புறமுள்ள பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அரிவாளுடன் வந்த மா்ம நபா், வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 அரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாராம்.
இது குறித்த புகாரின்பேரில் , குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
உடன்குடியில் ஏராளமான தெருக்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இந்த சூழல் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது. மேலும் புதுமனை புதுத்தெருவின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருள்கள் பயன்படுத்து வோரின் நடமாட்டம் அதிகமாக உள்ளதை காவல் துறையினா் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் மின்வசதியை ஏற்படுத்தி தர பேரூராட்சி மற்றும் மின்சாரத்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா் குணசீலன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...