இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாற்றுக்கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

தண்டுபத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:45 pm

DIN

தண்டுபத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுகவைச் சோ்ந்த திருக்கோளூா் ஊராட்சி மன்றத் தலைவா் பால்குளம் பிரபஞ்சன், கேரள மாநில அதிமுக முன்னாள் செயலா் கே.ராஜபாண்டியன், அமமுக மாவட்ட வழக்குரைஞா் அணிச் செயலா் இளங்கோ ஆகியோா் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்வின்போது திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், ஒன்றிய திமுக செயலா் பாா்த்திபன், தன இளங்கோ, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.