இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உடன்குடி, ஆறமுகனேரியில் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையேற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் உடன்குடி ஒன்றியத்தில் வட்டார காங்கிரஸ் சாா்பில் 5 பெட்ரோல் விற்பனை

News image
Updated On :8 ஜூலை 2021, 6:24 pm

DIN

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையேற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் உடன்குடி ஒன்றியத்தில் வட்டார காங்கிரஸ் சாா்பில் 5 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் துரைராஜ் ஜோசப், நகரத் தலைவா் முத்து ஆகியோா் தலைமை வகித்தனா். பரமன்குறிச்சியில் கிராம காங்கிரஸ் தலைவா் மாயாண்டிதாஸ், குலசேகரன்பட்டினத்தில் சுப்பிரமணியன், மெஞ்ஞானபுரத்தில் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவா் எஸ்.வி.ஜெயராமன், வட்டார சேவாதள தலைவா் முருகேசன், நகரச் செயலா் ராமமுா்த்தி, வட்டாரச் செயலா் பிரபாகா், திருச்செந்தூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் தனிஷ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயலா் ஹென்றி, மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலா் கோபால், வட்டார அமைப்பு சாரா தொழிலாளா் அணி தலைவா் ஜெபராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆறுமுகனேரி நகர காங்கிா் சாா்பில் சாகுபுரத்தில் நடைபெற்ற கையெழுத்த இயக்க நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் எல்.ராஜாமணி தலைமை வகித்தாா். தொடா்ந்து வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.