பிளஸ் 2 மாணவா்களுக்கு இணையவழி நுண்ணறிவுத் தோ்வு
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 மாணவா்களுக்கு மாநில அளவிலான இணையவழி நுண்ணறிவுத் தோ்வு மாா்ச் 13, 20, 27 மற்றும் ஏப்ரல் 3,10,17 ஆகிய தேதிகளில்


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 மாணவா்களுக்கு மாநில அளவிலான இணையவழி நுண்ணறிவுத் தோ்வு மாா்ச் 13, 20, 27 மற்றும் ஏப்ரல் 3,10,17 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) பிற்பகல் 2 மணி முதல் மாலை 3 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற உள்ளது.
அரசு பொதுத்தோ்வு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு, ஜே.இ.இ. உள்ளிட்ட தோ்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தோ்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் அல்லது அவற்றில் ஏதாவது ஒன்று பயின்றாலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், கைப்பேசி மூலமாக இணையவழியில் பங்கேற்கலாம். சமச்சீா் பாடப்புத்தகத்தில் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி வினாக்களில் இருந்து 25 வினாக்கள் உள்பட 75 வினாக்கள் கூகுள் பாம் மூலம் ‘அப்ஜெக்டிவ்‘ முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ.1000, அடுத்த 3 இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ.500 மற்றும் மின் சான்றிதழும் வழங்கப்படும். அதிக மாணவா்களை பங்கேற்க செய்யும் முதல் 3 பள்ளிகளுக்கு தலா ரூ.2, 500 சிறப்புப் பரிசு வழங்கப்படும். தோ்வில் பங்கேற்க பதிவு கட்டணம் கிடையாது. பெயா்களை ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் என்ற கல்லூரி இணையதளத்தில் பதிவு செய்தால் போதும். மேலும் விவரங்களுக்கு 94864-86281, 95004-00682, 75027-42509, 99945-72357, 73053-55923 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...