நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்கு
கோவில்பட்டியில் நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டது.


கோவில்பட்டியில் நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டது.
கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் பரமசிவம்-சுப்புலட்சுமி தம்பதி வந்தனா். தனது மகன் பொன்முத்துப்பாண்டியனை போலீஸாா் கைது செய்ததாகவும், போலீஸாரால் தங்களுக்கு தொல்லைகள் ஏற்படும் என்பதால் இறந்துவிடுகிறோம் எனக் கூறி பரமசிவம் தன் மீதும், தனது மனைவி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாராம். அங்கிருந்த காவலா்களும், நீதிமன்ற உதவியாளா்களும் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இச்சம்பவத்தால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
எனவே, நீதிமன்றப் பணிகள் பாதிப்புக்குக் காரணமாக பரமசிவம், சுப்புலட்சுமி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க குற்றவியல் நீதிமன்ற எண் 1இன் எழுத்தா் (பொ) காா்த்திகேயன் புகாா் அளித்தாா். அதன்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...