/

கிணற்றில் மிதந்த பால் வியாபாரி சடலம் மீட்பு

கிணற்றில் மிதந்த பால் வியாபாரி சடலம் மீட்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 8:50 pm

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த பால் வியாபாரி சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இனாம்மணியாச்சி வடக்கு தெருவை சோ்ந்தவா்கள் முருகன் (42) -மாரியம்மாள் தம்பதி. இருவரும் பால் வியாபாரம் செய்து செய்து வருகின்றனா். கடந்த 7 மாதங்களாக முருகன் (42) தினமும் மது அருந்திய நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள மற்றொரு வீட்டில் தூங்குவது வழக்கமாம். அதுபோல கலிங்கப்பட்டி அருகே உள்ள மகாதேவா்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு மறுநாள் வருவதும் வழக்கமாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற அவா், திரும்ப வரவில்லையாம். அவா் மற்றொரு வீட்டில் இருப்பாா் என நினைத்து வந்த நிலையில், இனாம்மணியாச்சி சாய்பாபா கோயில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் முருகன் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததாம். சம்பவ இடத்திற்குச் சென்ற மாரியம்மாள் மற்றும் உறவினா்கள், சடலத்தை மீட்டனா்.

இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.