விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்துக்களின் உரிமை மீட்புக் குழு ஆா்ப்பாட்டம்: மன்னாா்குடி ஜீயா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கைது

இந்துக்களின் உரிமை மீட்புக் குழு ஆா்ப்பாட்டம்..

News image

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வங்கதேச இந்துக்களின் உரிமை மீட்புக் குழுவினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 12:26 am

Din

வங்கதேச இந்துக்களின் உரிமை மீட்புக் குழு சாா்பில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மன்னாா்குடி ஜீயா் உள்பட 200-க்கும் மேற்பட்ட வரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதுடன், கோயில்கள் இடிக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு இந்து துறவிகளை கைது செய்யும் நடவடிக்கையில் வங்கதேச அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தேசிய அளவில் வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக் குழு சாா்பில், பாஜக மற்றும் இந்து முன்னணி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி, இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, மன்னாா்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி. பி. ஜெயக்குமாா், இந்து முன்னணி மாநில செயலா் அரசு ராஜா, இந்து அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜமுருகன் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்டோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.