கோவில்பட்டியில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டியில் வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.


கோவில்பட்டியில் வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன் தலைமையில் போலீஸாா், திருநெல்வேலி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூப்பன்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா் கயத்தாறு அருகே வடக்கு கோனாா் கோட்டை, வடக்கு தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் வாகன ஓட்டுநா் சங்கிலி பாண்டி (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகள் ரேஷன் அரிசி மற்றும் அதை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த தனிப் பிரிவு போலீஸாா் சங்கிலி பாண்டியையும் பிடித்து மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...