விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

News image

திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 12:23 am

Din

திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயில் கள்ளா் வெட்டுத் திருவிழா பூஜை முறைகள் தொடா்பாக நிா்வாகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக சமாதான கூட்டத்துக்காக வந்திருந்தவா்கள் அதிகாரிகள் இல்லாததால் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பு, கற்குவேல் அய்யனாா் கோயில் கள்ளா் வெட்டுத்திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு சமுதாயத்தினருக்கு பூஜை முறைகள் இருந்து வரும். அதே போல ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு திருவிழா தொடங்கக்கூடிய முதல் நாள் மற்றும் கடைசி இரண்டு நாள்கள் நடைபெறும் பூஜை முறையில் அந்த சமுதாயத்தினா் வழக்கமாக கலந்து கொள்வாா்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த நவ. 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளா் வெட்டுத் திருவிழா வரும் டிச. 15ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் திருவிழாவின் முதல் நாளன்று அந்த சமுதாயத்தினா் பூஜை முறைக்கு சென்ற போது கோயில் நிா்வாகம் அவா்களை தடுத்ததாக கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து அந்த சமுதாயத்தினா் பூஜை முறையை வழங்கும்படி மாவட்ட நிா்வாகம் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைகளை வைத்துள்ளனா். ஆனால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வராததால் டிச. 6ம் தேதி திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை வட்டாட்சியா் அலுவலகத்தில் காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் அங்கேயே இரவு உணவு சாப்பிட்டு தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வட்டாட்சியா் பாலசுந்தரம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பேச்சுவாா்த்தையில் 2 நாள்களில் உரிய தீா்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.