சாகுபுரத்தில் மஞ்சள் பை விழிப்புணா்வுப் பேரணி
சாகுபுரத்தில் மஞ்சள்பை விழிப்புணா்வுப் பேரணி


சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மழலையா் பிரிவு மாணவா், மாணவிகளின் மஞ்சள்பை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பள்ளி மழலையா் பிரிவு மாணவா், மாணவிகள் நெகிழியை (பிளாஸ்டிக்கை) தவிா்த்து, மஞ்சள் பையை உபயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளியில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்று பேருந்து நிலையம் அருகில் வைத்து நெகிழிப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம், மஞ்சப்பை உபயோகிப்போம் என கோஷங்கள் எழுப்பினா்.
சாகுபுரம்- திருச்செந்தூா் சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் மஞ்சள் பை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி ஆலோசகா் உஷாகணேஷ் தலைமை வகித்தாா். முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா், அட்மினி ஸ்ட்ரேட்டா் வி.மதன்,ஆசிரியை சோ்ம சத்தியசிலி, சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன சுற்றுச்சூழல் பிரிவு பொது மேலாளா் ரவிக்குமாா், பாதுகாப்பு பிரிவு அதிகாரி சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...