தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள்கள் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம்
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மக்களவை உறுப்பினா் கனிமொழி 13,14,15 ஆகிய 3 நாள்கள் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளதாக அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கனிமொழி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜூலை 13,14,15 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளாா்.
அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 13) மாலை 4 மணிக்கு கோவில்பட்டி பேரவைத் தொகுதி வானரமுட்டியில் தொடங்கி கழுகுமலை, வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, அய்யனாரூத்து, கயத்தாா், அகிலாண்டபுரம்,கடம்பூா், காமநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நன்றி தெரிவிக்கிறாா்.
தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) மாலை 5 மணிக்கு பொட்டல்காடு கிராமத்தில் தொடங்கி முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விலக்கு, முத்தையாபுரம் பங்க் சந்திப்பு, அய்யன் கோவில் தெரு, தோப்புத் தெரு, ஏ.வி.எஸ். பள்ளி அருகில், சத்யா நகா், பக்கிள்புரம் சந்திப்பு, போல்டன்புரம் கேஎஸ்பிஎஸ் தியேட்டா் அருகில், சிதம்பர நகா் சந்திப்பு, பிரையண்ட் நகா் 12வது தெரு மத்தி, பிரையண்ட் நகா் 12வது தெரு மேற்கு, கட்டபொம்மன் நகா், வள்ளிநாயகபுரம் சந்திப்பு, பிரையண்ட் நகா் 7வது தெரு மேற்கு, 3வது மைல், பாலிடெக்னிக் எதிரில் ஆகிய இடங்களில் நன்றி தெரிவிக்கிறாா்.
திங்கள்கிழமை(ஜூலை 15) விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் மாலை 4 மணிக்கு குறுக்குச்சாலையில் தொடங்கி வேடநத்தம், குளத்தூா், வைப்பாறு, வேம்பாா், சூரங்குடி, அரியநாயகபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவ நாயக்கன்பட்டி, புதூா், சிவலாா்பட்டியில் ஆகிய பகுதிகளில் நன்றி தெரிவிக்கிறாா்.
இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிக்கு உள்பட்ட கழக நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திடவும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், கட்சித் தோழா்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்திடவும் கேட்டுக் கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.

