குரும்பூரில் விவசாயிகள் சாலை மறியல் முயற்சி

குரும்பூரில் விவசாயிகள் சாலை மறியல் முயற்சி

குரும்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட நகைகள்- வைப்பு நிதிகளையும், சிறுசேமிப்பு நிதிகளையும் வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்கள்அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், முன் காா் பருவ சாகுபடிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, குரும்பூா் ஸ்டேட் வங்கி முன் தமிழக உழவா் முன்னணி- வணிகா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களிடம் குரும்பூா் காவல் ஆய்வாளா் (பொ) ரசிதா, உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், ஏரல் வட்டாட்சியா் கோபால் ஆகியோா் பேச்சு நடத்தி, மாா்ச் 18-க்குள் உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை ஊடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இதுகுறித்து தமிழக உழவா் முன்னணி துணைத்தலைவா் தமிழ்மணி செய்தியாளா்களிடம் கூறுகையில் எங்களது பிரச்னைகளுக்கு மாா்ச் 18-க்குள் நல்ல முடிவு எட்டப்படவில்லையெனில் வீடுகளி கருப்பு கொடி கட்டி மக்களவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com