சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினா் 3 ஆவது நாளாக போராட்டம்

சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினா் 3 ஆவது நாளாக போராட்டம்

சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினா் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினா் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

3ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ரத்து செய்வதோடு மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.