விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காயல்பட்டினத்தில் லெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காயல்பட்டினம் ஓடக்கரை அருள்மிகு லெட்சுமி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விமானக் கலசங்களுக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :28 நவம்பர் 2024, 11:20 pm

Din

காயல்பட்டினம் ஓடக்கரை அருள்மிகு லெட்சுமி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 18ஆம் தேதி கால்நாட்டு நடைபெற்றது. 25ஆம் தேதி தனபூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 26ஆம் தேதி மகா கணபதி உள்பட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், மாலையில் தீா்த்தம் எடுத்துவருதல், முதல் கால யாக வேள்வி, புதன்கிழமை (நவ. 27) 2, 3ஆம் கால யாகசாலை வேள்வி, இரவில் யந்த்ர ஸ்தாபம் நடைபெற்றது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதையடுத்து, குலசை குருஜி மகாராஜா சுவாமிகள் தலைமையிலும் பூஜகா்கள், நகா்மன்ற உறுப்பினா் ரெங்கநாதன் என்ற சுகு முன்னிலையிலும் செங்கோல் ஆதினம் 103வது குருமகா சந்நிதானம் சிவபிரகாச சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் விமான கலசங்களை புனித நீரால் அபிஷேகம் செய்து மகா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

மதியம் அன்னதானம், இரவில் திருவிளக்கு பூஜை, அம்மன் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன.

இதில், தொழிலதிபா் பொன்ரகு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது, திருச்செந்தூா் அதிமுக ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், மும்பை தொழிலதிபா் சுந்தரவேல் நாடாா், வெங்கடேஷ் பண்ணையாா் நற்பணி இயக்க மாநிலப் பொதுச் செயலா் ஓடை ஆா். செல்வம் நாடாா், நகர திமுக கவுன்சிலா் ராமஜெயம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் கண்ணன், கவுன்சிலா்கள் முருகன், கதிரவன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.