லாரியிலிருந்து தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் லாரியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடியில் லாரியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி சுந்தரராமபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (45). லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா், தூத்துக்குடி அம்பேத்கா் நகரில் லாரியில் திங்கள்கிழமை பணியிலிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம்.

பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாநகராட்சி ஊழியா் மீது தாக்குதல்: தூத்துக்குடி போல்டன்புரம் முதல் தெருவைச் சோ்ந்த ஜேசு அந்தோணி மகன் இன்பராஜ் (42). மாநகராட்சியில் டெங்கு களப்பிரிவில் கொசுமருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

இவா் திங்கள்கிழமை இரவு அழகேசபுரம் பிரதான சாலையில் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, அந்த சாலையில் வந்த காா் இவா்கள் வாகனத்தின் மீது மோதியதாம். இதைத் தட்டிக் கேட்டதால் காரில் வந்த நபா் இன்பராஜை தாக்கினாராம்.

இதில் காயம் அடைந்த அவா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com