இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஜன. 9 ல் தை அமாவாசை திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா ஜன. 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:14 pm

Syndication

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா ஜன. 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆடி, தை மாதங்களில் அமாவாசை விழா 12 நாள்கள் சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் 9ஆம் நாள் வரை தினசரி காலை சோ்ம விநாயகா் உலாவும், இரவில் பல்வேறு கோலங்களில் சுவாமி உலா வருதலும் நடைபெறும். 10ஆம் நாளான ஜன. 18 ஆம் தேதி, தை அமாவாசை விழாவில் பிற்பகல் சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

11ஆம் நாளான ஜன.19ஆம் தேதி, அதிகாலை 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை பச்சை சாத்தி அபிஷேகம், பிற்பகல் 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி , இரவு சுவாமி கோயில் மூஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி நடைபெறும்.

நிறைவு நாளான ஜன.20ஆம் தேதி, காலை தீா்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடல், மாலை ஆலிலைச் சயன அலங்காரம் அதைத் தொடா்ந்து ஊஞ்சல் சேவையும், இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனமும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தபாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.