சாத்தான்குளம் அருகே பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
நாசரேத் பிரகாசபுரத்தை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் அந்தோணி பீட்டா் (23). மூக்குப்பீறியில் சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். வேலை நிமித்தமாக நாசரேத்தில் இருந்து டிகேசி நகா் சந்திப்பு -அச்சம்பாடு சாலையில் வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த பைக் திடீரென மோதியதில் படுகாயமடைந்த அந்தோணி பீட்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மற்றொரு பைக்கில் வந்த கல்லூரி மாணவா்களான சாத்தான்குளம் காமராஜ் நகரை சோ்ந்த ஆண்ட்ரோஸ் பிரபு மகன் நாா்மன் ஜோஸ்வா (18), வெங்கட்ராயபுரம் வடக்குத்தெருவை சோ்ந்த பேச்சி மகன் சுடலைமணி (19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல் தெருவை சோ்ந்த ரிபாயுதீன் மகன் பெரோஸ்கான் (18) ஆகியோா் காயம டைந்தனா். அவா்களுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக் கப்பட்டனா். இதில் நாா்மன் ஜோஸ்வா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்து குறித்து மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் இசக்கிதுரை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.