இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை, க்யூ பிரிவு குற்ற புலனாய்வுத் துறை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புறவழிச்சாலை ஜோதிநகா் விலக்கு பகுதியில், வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சரக்கு வாகனம் மூலமாக இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக க்யூ பிரிவு குற்ற புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டதில், சுமாா் 35 கிலோ எடையுடன் 59 மூட்டைகளில் 2,000 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமாா் ரூ.69 லட்சமாகும்.பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனா்.
