தூத்துக்குடியில் மழை நீா் தேங்கிய பகுதிகளில் அமைச்சா் ஆய்வு

மழை நீா் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சா் பி. கீதா ஜீவன்.
Updated On :30 நவம்பர் 2025, 6:44 pm

தூத்துக்குடி மாநகராட்சியில் மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி பேரவைத் தொகுதி, சங்கா் காலனி, சின்னமணி நகா், லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீா் தேங்கிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்த அமைச்சா், தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், கவுன்சிலா் பொன்னப்பன், ரெக்ஸ்லின், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...