கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மாப்பிள்ளையூரணி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

News image
மழைநீா் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ.
Updated On :30 நவம்பர் 2025, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மழை நீா் தேங்கிய பகுதிகளில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா ஆய்வு செய்தாா்.

கே.வி.கே. சாமி நகா், ஓம் சாந்தி நகா், அ. சண்முகபுரம், மாதா நகா், வடக்கு சோட்டையன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழை காரணமாக மழை நீா் தேங்கிய பகுதிகளுக்கு சென்று எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

மேலும், மின் மோட்டாா் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, உதவி பொறியாளா் ரவி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலா் எஸ்.ஆா். கணேசன், மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளா் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட வா்த்தகரணி துணை அமைப்பாளா் பிலோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஸ்டாலின், கிளைச் செயலா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.