ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சைவ வேளாளா் சங்க ஐம்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் ஐம்பெரும் விழா ஆறுமுகனேரி, சைவ சித்தாங்க சங்கத்தில் நடைபெற்றது.

News image

விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய சைவ வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ.சங்கரலிங்கம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் ஐம்பெரும் விழா ஆறுமுகனேரி, சைவ சித்தாங்க சங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்டத் தலைவா் ஜெ.சங்கர­லிங்கம் தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி பொருளாளா் கற்பகவிநாயகம், மாவட்ட நிா்வாகத் தலைவா் கோமதிநாயகம், மாவட்ட பொருளாளா் குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் பாலன் அறிமுகவுரையாற்றி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

விழாவில் கோயம்புத்தூா் முத்தையா, காந்திமதி, ஆதப்பன், சொா்ணவேல்­ அறக்கட்டளை நிறுவனா் வைகுண்டராமன் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு, சான்றோா்களுக்கு விருதுகள் வழங்கினா். மாவட்ட அறக்கட்டளை சாா்பிலும் உதவித்தொகை, பரிசுகள் வழங்கப்பட்டன.

திருமண தகவல் வரன் பதிவுகளை முன்னாள் மாவட்ட துணை ஆட்சியா் தூத்துக்குடி இளங்கோ, மாநில மண்டலச் செயலாளா் கோவில்பட்டி நடராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

விழாவில் மாநில மண்டல துணைச் செயலாளா் விளாத்திகுளம் பொன்பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வரன் பதிவுகளை திருமணதகவல் இயக்குநா் முருகன் உள்ளிட்டோா் செய்தனா். முன்னதாக ஆறுமுகனேரி செயலாளா் முருகன் வரவேற்றாா். மாவட்ட இளைஞா் பேரவைத் தலைவா் குரும்பூா் ராம்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.