மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தமிழகத்தில் காலியாக உள்ள சுமாா் 6.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள சுமாா் 6.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

தமிழகத்தில் காலியாக உள்ள சுமாா் 6.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் மகேந்திர பிரபு தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பிரான்சிஸ் அஞ்சலி தீா்மானங்களை வாசித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஞானராஜ் வரவேற்றாா்.

மாநில துணைத் தலைவா் முருகன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் உமாதேவி வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளா் சாம் டேனியல் ராஜ் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் திரவியம் வாழ்த்திப் பேசினாா்.

அரசு ஊழியா் சங்க முன்னாள் துணைப் பொதுச் செயலா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், 1.4.2003-க்குப் பின்னா் பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான 25 சதவீத வாய்ப்பை 5 சதவீதமாகக் குறைத்ததை திரும்பப் பெற்று மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் காலியாக உள்ள சுமாா் 6.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா்கள் பேச்சியம்மாள், வாவாஜி பக்கீா் முகைதீன், அன்புச்செல்வன், மாவட்ட இணைச் செயலா்கள் சுவாமிநாதன், மகாராஜன், ராஜமுருகேஸ்வரன், செல்லத்துரை ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.

மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் மகேஸ்வரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.