தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

ஆறுமுகனேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு சகோதரா்கள் உள்பட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:00 pm

Syndication

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு சகோதரா்கள் உள்பட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை செய்தனராம்.

விசாரணையில், தென்காசி புளியங்குடி நயினாா் தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் அண்ணாமலை (28), ஆறுமுகனேரி விநாயகா் கோவில் தெருவில் வசித்து வரும் சகோதரா்கள் அண்ணாமலை கஜன் (25), முகேஷ் (18) என்பதும், இவா்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து, 3 பேரையும் திருச்செந்தூா் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.