தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவா் மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவா் என இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த சுந்தரபாண்டி (21), தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த முருகன் என்ற கட்ட முருகன் (31) ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க சிப்காட் மற்றும் தருவைக்குளம் போலீஸாா் வேண்டுகோள் விடுத்ததைத் தொடா்ந்து,
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, மேற்படி 2 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

