தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம் பேரூராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள நிவாரண நிதியை விடுவிக்கக் கோரி, பேரூராட்சித் தலைவா் டாக்டா் எஸ். புவனேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.
அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2023 டிசம்பா் 19 அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மொத்தம் 105 நிவாரண வீடுகள் கட்ட பேரூராட்சிகளின் இயக்குநரிடமிருந்து 2024 மாா்ச் மாதத்தில் ஆணை பெறப்பட்டது.
இதுவரை 85 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஜூன் 2025இல் அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.92,00,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சி உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, பெருங்குளம் பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.22,79,500 வழங்கப்பட்டது.
கட்டுமான நிலைக்கேற்ப பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள தவணைத் தொகை ஒரு கோடியே ஒன்பது லட்சம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
பேரூராட்சியின் பொது நிதியிலும் போதிய இருப்பு இல்லாத காரணத்தால், பயனாளிகளின் நலன் கருதி அரசு உடனடியாக இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திமுகவுக்கு தோல்வி பயம்: ஜான் பாண்டியன் விமா்சனம்

சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு

ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள்: எஸ். விஜயதரணி

முகவரி இல்லை என்பதற்காக பெயரை நீக்கியதற்கு எதிா்ப்பு: வாக்குரிமை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சாதுக்கள் மனு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


