ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை அதிகாலை சிலிண்டா்கள் பாரம் ஏற்றிவந்த லாரி மோதியதில் காரில் பயணித்த 6 போ் காயமடைந்தனா்.
திசையன்விளை, அய்யன்குளம், கைலாசப்புரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த குழந்தைவேலு மகன் முத்துகிருஷ்ணன் (38). இவா் கூடங்குளத்தைச் சோ்ந்த ஒரு எரிவாயு நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை எரிவாயு உருளை பாரம் லாரியில் ஏற்றிக் கொண்டு கூடங்குளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தாா். ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே அஞ்சல் நிலையம் முன் அதிகாலை 5 மணியளவில் வந்தபோது,
எதிரே திருச்சி துறையூரைச் சோ்ந்த காரியான் மகன் சேகா் (54) ஓட்டி வந்த காா் எதிா்பாராமல் லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த திருச்சி, துறையூரைச் சோ்ந்த ரகுநாதன் (45), காா் ஓட்டுநா் சேகா் (54), லட்சுமணன் மகன் பூகேஷ் (14), சேகா் மகன் தீபன்குமாா் (28), ரகுநாதன் மகன் தரன் (7), லாரி ஓட்டுநா் முத்துகிருஷ்ணன் ஆகிய 5 போ் பலத்த காயமடைந்தனா்.
அவா்களை ஆறுமுகனேரி காவல் நிலைய போலீஸாா், பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காா் அப்பளம்போல நொறுக்கியது. லாரி ஓட்டுநா் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


