தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தமிழகத்தில் 2,500 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள்: அமைச்சா் கோ.க. அருண்ராஜ்

தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் கோ.க. அருண்ராஜ்.

செவிலியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அமைச்சா்கள் கோ.க. அருண்ராஜ், பெ. மதன்ராஜா.

Updated On :

தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் கோ.க. அருண்ராஜ்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநிலப் பொது மறுஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, அரசு மருத்துவமனைகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட 47 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மருத்துவம், மருத்துவக் கல்வி - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கோ.க. அருண்ராஜ், குறு, சிறு - நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் மருத்துவப் பணிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் உமா, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. சரவணன், மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்குநா் வ. லோகநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பொறுப்பேற்ற பிறகு 700-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், 1,193 சுகாதார ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 4,724 செவிலியா் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன.

மழைக் காலத்தை முன்னிட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நின்ற பிறகு டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் துறை ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எபனேசா் ஜோயல் குமாா், மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் பிரியதா்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் யாழினி, வித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.