
ஆத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
ஆத்தூா் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆத்தூா் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அமைப்பாளா் காா்த்திகா, பள்ளித் தலைமையாசிரியா்கள் கங்கா கெளரி, தேவசகாயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், குழந்தைகள் மற்றும் மாணவா்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னா், தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று பெங்களூரு இஸ்ரோ மையம் சென்றுவந்த மாணவா்கள் அக்சயா, அப்துல் பஷீத், ஹரிஷ், நசீரா பானு ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆத்தூா் பேரூராட்சி உறுப்பினா்கள் கேசவன், அசோக்குமாா், கமலச்செல்வி, சிவா, பேரூராட்சி பணியாளா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







