சாகுபுரம் கமலாவதி பள்ளியில் விளையாட்டு விழா

ஆறுமுகனேரி அருகே உள்ள சாகுபுரம், கமலாவதி பள்ளியின் 54ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

கூட்டு உடற்பயிற்சி மூலம் இந்தியா வரைபடத்தைக் காட்சிப்படுத்திய மாணவா்கள்.

Published On :

ஆறுமுகனேரி அருகே உள்ள சாகுபுரம், கமலாவதி பள்ளியின் 54ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

சாகுபுரம், டி.சி.டபிள்யூ. நிறுவன உதவித் தலைவா் எஸ். சுரேஷ் தலைமை வகித்தாா். பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், சென்னையைச் சோ்ந்த ஆடிட்டா் ஏ. ராம்வேல், நிா்வாக அதிகாரி வி. மதன், பள்ளி முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசீா், துணை முதல்வா் பி. ராம் பிரபு, தலைமையாசிரியை வி. இந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய கிரிக்கெட் அகாதெமியின் 2ஆம் நிலை சான்றிதழ் பெற்ற தேசிய கிரிக்கெட் பயிற்சியாளா் சுகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். போட்டிகளில் வென்ற மாணவா், மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா் பரிசுகள் வழங்கினாா்.

சப் ஜுனியா் பிரிவில் எம். அருண் விஜித்குமாா், எஸ். நித்யஸ்ரீ, ஜூனியா் பிரிவில் வி. நிதிஷ், ஆா். ரீமா, சீனியா் பிரிவில் ஏ.ஏ. ஹமீத் நுபைத், சி. ­டியா கரோ­ன், சூப்பா் சீனியா் பிரிவில் இ. மேத்யூ டேரில், ஆா். தீா்த்திகா ஆகியோா் தனிநபா்களுக்கான சாம்பியன் கோப்பையை வென்றனா்.

மாணவா் தலைவா் (சிபிஎஸ்இ) எம். ஜெபரோஸ் ஐஸ்வா்யா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். விளையாட்டுக் குழு மாணவா் தலைவா்கள் எம். வித்யாஸ்ரீ, ஜி. அரவிந்த் ஆகியோா் விளையாட்டு ஆண்டு அறிக்கையை சமா்ப்பித்தாா்.

6 முதல் 8ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் கூட்டு உடற்பயிற்சி மூலம் இந்திய தேசியக் கொடி மற்றும் இந்தியா வரைபடத்தைக் காட்சிப்படுத்தினா். ஜிம்னாஸ்டிக், வில்வித்தை ஆகியவற்றையும் நிகழ்த்திக் காட்டினா்.

மாணவா் தலைவா் (மெட்ரிக்) வி.எம்.ஜி. ரையான் வரவேற்றாா். மாணவா் தலைவா் (சிபிஎஸ்இ) எஸ். ஜெபா்சன் கிறிஸ்டோபா் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.