திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

டி.​ முருங்கப்பட்டி உயர்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

துறையூர், செப். 20: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முன்னாள் முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்ட டி. முருங்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படுமா என்று இந்தப் பகுதி மக

Updated On :20 செப்டம்பர் 2012, 11:25 pm IST

துறையூர், செப். 20: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முன்னாள் முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்ட டி. முருங்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படுமா என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டி. முருங்கப்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 1956-ல் அப்போதைய முதல்வர் கே. காமராஜரால் திறக்கப்பட்டது. பின்னர், 1961-ல் இது உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

இங்கு கல்வி பயில்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பச்சமலை, கொல்லிமலை கிராம மலைவாழ் மக்களின் குழந்தைகள்தான். இவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு மேல்நிலைக் கல்வி பயில சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அல்லது 5 கி.மீ. தொலைவுள்ள வைரிசெட்டிப்பாளையம் அல்லது 30 கி.மீ. தொலைவுள்ள துறையூருக்குத்தான் செல்ல வேண்டும். இதனால், வசதி இல்லாதவர்கள் பத்தாம் வகுப்புடன் நின்று விடுகின்றனர்.

இதுகுறித்து இப் பள்ளித் தலைமையாசிரியர் கூறியது:

ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி பள்ளி மூலம் கருத்துரு அனுப்பினால், அரசு ஆய்வு செய்து மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கும். கூடுதல் வகுப்பறைகள் கட்ட போதுமான இட வசதியுள்ளது. தற்போதுகூட நபார்டு நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள், சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 100-க்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 90 சத மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.

அரசு இப் பள்ளியைத் தரம் உயர்த்தினால் இந்தப் பள்ளியில் பயில்பவர்கள் மட்டுமன்றி, 3 கி.மீ. தொலைவில் உள்ள நாகநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்

பயில்பவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பல ஒன்றியப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது

இந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக பதவி வகித்த சரோஜா இங்கு 1960-ல் படித்தவர் என்பதும், இவரைத் தவிர, இங்கு பயின்ற பலர் இன்று பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தவும், இந்தப் பள்ளியில் அருகில் உள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.