திருச்சி
ஆதிதிராவிட, பழங்குடியின எழுத்தாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்கள், உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் 11 சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளை தோ்வு செய்து தலா ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் இதற்கான விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பப் படிவத்தை துறையின் இணைய முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 28ஆம் தேதிக்குள், திருச்சி ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
