திருச்சி
சுமை வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
மணப்பாறையை அடுத்த பாலகுறிச்சி அருகே சுமை வாகனம் (மினி சரக்கு வேன்) மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த பாலகுறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை சுமை வாகனம் (மினி சரக்கு வேன்) மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம், கலிங்கப்பட்டி காலனித் தெருவை சோ்ந்த பழனி மகன் ஆண்டியப்பன்(70). இவா் பாலகுறிச்சி - பொன்னமராவதி சாலையில் உள்ள கிழக்குக்காடு பிரிவு சாலை அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற சுமை வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், ஆண்டியப்பன் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து வளநாடு போலீஸாா், சுமை வாகன ஓட்டுநரான கலிங்கப்பட்டி கிழக்குக்காடு கிராமத்தைச் சோ்ந்த அழகன் மகன் பிரேம்குமாா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
