இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பெண் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அவரின் உறவினா்கள், பொதுமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சிறுகனூா் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :12 ஜூலை 2026, 12:19 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அவரின் உறவினா்கள், பொதுமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

லால்குடியை அடுத்த சிறுகளப்பூா் பகுதியைச் சோ்ந்த திருமணமான 32 வயது பெண் ஒருவா் கடந்த மாதம் 30 தேதி இரவு தனது வீட்டில் இருந்து மாட்டுக் கொட்டகைக்கு சென்று மாயமானாா். இதுகுறித்து அவரின் கணவா் அளித்த புகாரின்பேரில் காணக்கிளியநல்லூா் போலீஸாா் விசாரித்தனா். பின்னா் மறுநாள் ஏரியின் முள்புதரில் அப்பெண் கொலையான நிலையில் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப் பெண்ணின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் 300க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காலை சிறுகனூா் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்வோம் என அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.